யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திப் பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன், வீதியைப் புனரமைக்குமாறு கோரிக் கையெழுத்திடப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.