உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதல் காரணமாக ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
அல்பேனியா, அர்ஜென்டினா, வட மெசிடோனியா, பலஸ்தீன், போர்த்துக்கல் மற்றும் மொன்டெனெக்ரின் ஆகிய நாடுகளின் இராஜதந்திர நிலையங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன
உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்தி இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல வாகனங்கள்தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.