மதுபானசாலை விவகாரம் பற்றிய குற்றச்சாட்டை என்மீது சுமத்துபவர்கள் தைரியம் இருந்தால் இதனை ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) சவால் விடுத்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (09) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய கடிதத்தலைப்பிலே நானே எவ்வாறு ஒரு பதிவிலக்கத்துடன் கூடிய மதுபானசாலைகளுக்கான விண்ணப்பத்தை கொடுக்க முடியும்.
எங்கள் கட்சிக்குள் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த விடயங்களை முதன் முதலிலே வெளியிலே பரப்பி அதற்கான பிரசாரங்களை மேற்கொண்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.