சப்பான் பாராளுமன்றத்தை கலைக்க அந்நாட்டின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தாராள சனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே, புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தார்.